ஈரோடு இடைத்தேர்தல் - நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 5-ந் தேதி இடை த்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு தி.மு.க, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை என்று 55 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வேட்பு மனுக்கள் வாபஸ் பெற இன்று மதியம் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் 3 மணியுடன் நிறைவு பெற்று, இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதாவது இந்த இடைத்தேர்தலில், சுயேச்சை வேட்பாளர்கள் 8 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதன்மூலம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 47 பேர் போட்டியிடுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சீன்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சித் தரப்பில் கரும்பு விவசாயி சின்னம் கோரப்பட்ட நிலையில், அது வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மறுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

miv symbol provide to ntk in erode bu election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->