விஜயை பற்றி யாரும் பேச கூடாது - முதல்வரின் உத்தரவால் திமுகவினர் அதிர்ச்சி.!
mk stalin order no speech about tvk leader vijay
தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே உள்ளிட்ட மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் எல்லாம் தேர்தலை எதிர்கொள்ள இப்போதே தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், வரும் 14-ந் தேதி தமிழக சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன்பு கடைசியாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இதுதான் என்பதால், அறிவிப்புகளுக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது.

இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக கடந்த மாதம் 25-ந் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
"அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வெற்றியை மட்டுமல்லாது, மாவட்டத்தில் உள்ள பிற தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றியையும் உறுதி செய்ய வேண்டும். பொறுப்பு அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்..
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை பற்றி யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம். "அப்படி ஏதாவது பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், கட்சி தலைமையில் இருந்து கருத்து தெரிவிக்கப்படும்" என்றுத் தெரிவித்துள்ளார். 'விஜய் பற்றிய விமர்சனங்கள் கூடாது' என்ற உத்தரவு அமைச்சர்களையும், தி.மு.க. தொண்டர்களையும் யோசிக்க வைத்துள்ளது.
English Summary
mk stalin order no speech about tvk leader vijay