'2024' யார் ஆட்சி அமையக்கூடாது என்பதற்கான தேர்தல் - பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு.!  - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தனது 70 -வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். இதன் காரணமாக திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவி நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், இன்று பிறந்த குழந்தைகளுக்கு உதயநிதி ஸ்டாலின் தங்க மோதிரங்கள் பரிசாக அளித்தார்.

70 வது பிறந்தநாளை கொண்டாடும் முதல்வர் ஸ்டாலினுக்கு பல அரசியல் கட்சித் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அவரது 70-வது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் ஒரு பொதுக்குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், தேசிய கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த பொதுக்கூட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், "2024 நாடாளுமன்ற தேர்தல் யார் ஆட்சி அமைக்க கூடாது என்பதற்கான தேர்தல்.

ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க திமுக தயார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாஜகவை வீழ்த்த வேண்டும். காங்கிரஸ் இல்லாத கூட்டணி என்பது நிராகரிக்கப்பட வேண்டும். அது கரை சேராத கூட்டணி." என்று அவர் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Stalin speech about 2024 parliament election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->