பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கு: எம்எல்ஏவின் மகன், மருமகள் ஜாமின் மனு!
MLA son daughter in law bail tomorrow investigation
சென்னை, பல்லாவரம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏவான கருணாநிதியின் மகன் மற்றும் அவரது மனைவி, அவர்களது வீட்டில் பணியாற்றிய சிறுமியை கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்தது.
இதனால் எம்எல்ஏவின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மருமகள் மெரினா மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து தலைமறைவான தம்பதியை போலீசார் தனிப்படை அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டு இவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட பல்லாவரம் எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகளுக்கு ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
English Summary
MLA son daughter in law bail tomorrow investigation