பல்லாண்டு கோரிக்கை நிறைவேறுமா..?? அரசு பள்ளி சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்க..!! ம.நீ.ம வலியுறுத்தல்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மக்கள் நீதி மையம் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 12,000 மேற்பட்ட சிறப்பு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் உடற்கல்வி, கணிதம், தையல், தோட்டக்கலை, வாழ்வியல் திறன் உள்ளிட்ட பல பாடங்களை கற்பித்து வருகின்றனர். மத்திய அரசின் சர்வே சிக்சா அபிநன் திட்டத்தின் கீழ் 2012ல் இவர்களுக்கு 5000 ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் பணி அமர்த்திய தமிழக அரசு. பின்னர் அந்தத் திட்டம் சமக்ர சிக்சா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாசிரியர்களுக்கு 10,000 ரூபாய் தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழக அரசுக்கு மக்கள் நீதி மையம் வலியுறுத்தியுள்ளது. மக்கள் நீதி மையத்தின் ட்விட்டர் பக்கத்தில் கட்சியின் மாநில செயலாளர் பொன்னுசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MNM insists TNgovt schools spl teachers should be made permanent


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->