கோவில்களுக்குள் செல்போன்கள் கொண்டுச் செல்ல கூடாது - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கோவில்களுக்குள் செல்போன்கள் கொண்டுச் செல்ல கூடாது - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

சமீபத்தில் பழனி தண்டாயுதபாணி கோவில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் கோவில் நிர்வாகத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், கருவறையில் உள்ள சாமியின் புகைப்படம் வெளியானால் அறநிலையத்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  "பழனி கோவிலுக்குள் செல்போன்கள் மற்றும் கேமராக்கள், கேமரா பொருத்திய சாதனங்கள் உள்ளிட்டவை கொண்டு செல்வதற்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு வருகிற அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும். 

தற்போது பழனி கோவில் அடிவாரத்தில் ரூ.5 கட்டணத்தில் மொபைல் போன்களை பாதுகாக்கும் மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் திருச்செந்தூர் கோவில்களில் சுயஉதவிக்குழுக்கள் மூலமாக செல்போன்கள் சேகரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 

அதன்படி பழனியில், முதற்கட்டமாக விஞ்ச், ரோப் கார் மையங்கள், அடிவார பாத விநாயகர் கோவில் உள்ளிட்ட 3 இடங்களில் செல்போன்கள் சேகரிப்பு மையங்கள் அமைக்கபட உள்ளன. பழனி மலை கோவிலுக்குள் செல்போன்கள் கொண்டு செல்லக்கூடாது என்று ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பக்தர்கள் தங்குமிடங்களில் விளம்பரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதையும் மீறி பக்தர்கள் யாரேனும் புகைப்படம் எடுத்தால் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கோவிலுக்குள் கேமரா, செல்போன்கள் உள்ளிட்ட சாதனங்களை கொண்டு செல்லக்கூடாது என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அனைத்து கோவில்களிலும் அமல்படுத்த வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mobile not allowed to temples high court order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->