திருவள்ளூர் : வடமாநிலத் தொழிலாளர்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு.!
mobile number allounce for north state youths complaint in tiruvallur
சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களை அடிப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலும் குறிபாக இந்த வீடியோ உத்தர பிரதேசம் மாநிலத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலானது.
இது தொடர்பாக விசாரணை செய்த தமிழக போலீசார் இந்த வீடியோ போலியானது என்றும், இதுபோன்று வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தனியார் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தொழிற்சாலைகளில் பணி புரியும் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்ததாவது:-
"தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெற்ற மாவட்டங்களில் திருவள்ளூர் மாவட்டமும் ஒன்று. மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதம் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து கிடைக்கிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவிவரும் வதந்தி வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 2.5லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு இதுவரை எந்த அசம்பாவித சம்பவங்களும் ஏற்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக 180 தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
வடமாநில தொழிலாளர்களுக்கு ஏதேனும் பிரச்சினை மற்றும் பாதிப்புகள் ஏற்பட்டால் திருவள்ளூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 7626 ற்கு தொடர்புகொள்ளலாம். மேலும், வாட்ஸ் அப் மூலம் புகார் அளிப்பதற்கு 9444317862 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்று அவர் தெரிவித்தார்.
English Summary
mobile number allounce for north state youths complaint in tiruvallur