பிரதமருக்கு எதிராக கருப்புகொடி போராட்ட முயற்சி - காங்கிரசார் அதிரடி கைது.! - Seithipunal
Seithipunal


சென்னைக்கு இன்று வருகின்ற பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி போராட்டம் நடத்து போவதாக அறிவுத்திருந்தனர். 

மேலும் சைதாப்பேட்டை அருகே இன்று காலை 11 மணியளவில் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு தலைமையில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டார்கள். 

ஆனால் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி போராட்டத்தில் ஈடுபட இருந்த முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் போலீசார் நேற்று இரவு முதல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கிடையே தங்களது எல்லைக்குள் போராட்டம் நடத்தக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் போலீசார் சிலரை விட்டனர். 

இதனை அடுத்து அவர்கள் சைதாப்பேட்டை பகுதியில் திரண்டு கருப்பு கோடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் தடையை மீறி கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ., மாநிலத் துணைத் தலைவர், பொதுச்செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் உள்பட சுமார் 150 பேரை போலீசார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் போலீசார் தனியார் திருமணம் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi Against Black Flag Protest Congress members Arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->