செல்போன் யூசர்களே உஷார்! புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பண மோசடி!
Money fraud by portraying the photo as obscene
சென்னை : கீழ்ப்பாக்கம் அருகே வாலிபரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பண பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணி புரிந்துவருகிறார். சமீபத்தில் இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு இவரது ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியானது.
அதில் ராகேஷ் இளம்பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாசமாக போலியாக சித்தரிக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு ராகேஷ் அதிர்ச்சி அடைந்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வாட்ஸ்அப் எண்ணில் மர்ம நபர் பேசினார்.
அந்த மர்மநபர் ராகேஷின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட உள்ளதாகவும் அவ்வாறு வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் ரூ.1.20 லட்சம் வேண்டும் என்று கேட்டதக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன ராகேஷ் குறிப்பிட்ட அந்த மர்மநபரின் வங்கி கணக்கிற்கு ரூ1.20 லட்சத்து அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர், இது குறித்து டி.பி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராகேஷிடம் பண பறிப்பில் ஈடுபட்ட மர்மநபரை காவல்துறை வலைவீசி தேடி வருகின்றனர்.
English Summary
Money fraud by portraying the photo as obscene