குரங்கு அம்மை.. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


கொரோனா  வைரஸை தொடர்ந்து, குரங்கு அம்மை வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கனடாவில் சிலருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது அமெரிக்காவிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் இருந்து மாசாசூசெட்ஸ் திரும்பியவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகள் அமெரிக்காவிலும் குரங்கு அம்மை உள்ளதை உறுதி செய்துள்ளது. 

இதையடுத்து, 13 நாடுகளை சேர்ந்த 92 பேருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதா உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் குரங்கு அம்மை ஆகும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட 13 நாடுகளில் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், குரங்கு அம்மை நோய் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் குரங்கு அம்மை தடுப்பு சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, மாநகராட்சி அனைவர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். குரங்கு அம்மை இருப்பதாக சந்தேகிக்கப்படும் நாடுகளுக்கு கடந்த 21 நாட்களில் பயணம் செய்தவர்களில் தகவல்களை பெறவும், அறிகுறிகள் உள்ள நோயாளிகளை உடனடியாக தனிமைப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Monkey pox warning for tn govt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->