நாளை முதல் மீண்டும் கொசு மருந்து அடிக்கும் பணி..MLA அனிபால் கென்னடி கோரிக்கையை ஏற்ற நகராட்சி!
Mosquito repellent resumes from tomorrow. Municipality accepts MLA Anibal Kennedys request
புதுச்சேரி ,உப்பளம் தொகுதி முழுவது கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனிபால் கென்னடி ஏம் எல் ஏ நகராட்சி மற்றும் பொது பணி துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்டபகுதிகளில் கொசுக்களை ஒழிக்க இதுவரை கொசுமருந்து தெளித்தும், உப்பனார், பெரிய வாய்க்கால் மற்றும் கழிவு நீர்வாய்கால்களை தூர்வாரியும்,அசுத்தமானசாலைகளை தூய்மைப்படுத்தியும் கொசுக்களை அழிக்கும் பணிகள் இதுவரை தொடர்ச்சியாக சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக பொது மக்களின் நலம் கருதி நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகையால் கொசுமருந்து அடிக்குமாறு சட்டமன்ற உறுப்பினர் அனிபால்கென்னடி அவர்கள் கோரிக்கை வைத்தார் . இன் நாட்களில் வீட்டில் பயன் படுத்தும் கொசு விரட்டியால் எந்த வகையான பயனும் இல்லை மக்களுக்கு தேவையற்ற செலவும், உடல் நல பாதிப்பும் தான் ஏற்படுகிறது அகவே இது குறித்து அலோசலை மேற்கொள்ள இன்று நகராட்சி டாக்டர் ஆர்த்தி அவர்களை நேரில் சென்று சந்தித்து சட்ட மன்ற உறுப்பினர் பேசினார்,
நாளை முதல் மீண்டும் கொசு மருந்து அடிக்கும் பணிகளை தொடங்குகிறோம் என்று டாக்டர் உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து பொது பணி துறை நீர் பாசன பிரிவு செயற்பொறியாளர் ராதா கிருஷ்ணன் அவர்களையும் நேரில் சென்று சந்தித்து சட்ட மன்ற உறுப்பினர் பேசினார், பெரிய வாய்க்கால் மற்றும் உப்பனார் மீண்டும் மீண்டும் தூர் வாரிகொண்டே இருங்கள் என்று சட்ட மன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்தார், பணியை நாளை நிச்சயம் மேற்கொள்ளபடும் என்று அதிகாரி உறுதி அளித்தார். உடன் தொகுதி துணை செயலாளர் ராஜி, கிளை செயலாளர்கள் காலப்பன், ராகேஷ் உடன் இருந்தனர்.
English Summary
Mosquito repellent resumes from tomorrow. Municipality accepts MLA Anibal Kennedys request