9ம் வகுப்பு மாணவி தற்கொலை.. சோகத்தில் தாயும் பாட்டியும் எடுத்த விபரீத முடிவு..!
Mother and daughter committed Suicide in Dharmapuri
ரயில் முன் பாய்ந்து தாய் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி செந்தில் நகர் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் ரயில் மோதி உயிரிழந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.முதற்கட்ட விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கும்ளாபுரத்தைச் சேர்ந்த ராதாம்மாள் (வயது 60), சுமித்ரா என்பது தெரியவந்தது. சுபத்ராவின் மகளுக்கு தீரா வயிற்று வலி இருந்துள்ளது.
இதனால், அந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், மகள் இறந்த துக்கத்தில் சுமித்ராவும் அவரது தாயும் இருந்துள்ளனர். இதனால், இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Mother and daughter committed Suicide in Dharmapuri