"தாயின் கள்ளக்காதலை" கண்டித்த பிளஸ்-2 மாணவன்.. கத்தியால் குத்திய கள்ளக்காதலன்..! சென்னையில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


சென்னையில் தாயின் கள்ளக்காதலை கண்டித்த பிளஸ்-2 மாணவனை கள்ளக்காதலன் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிளஸ்-2 மாணவன் மதன் குமார் (16). இவரது தந்தையும், தாயும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர். அப்பொழுது வேளச்சேரி பகுதியை சேர்ந்து கார்த்திக் என்பவருக்கும், மதன்குமாரின் தாயாருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலராக மாறியுள்ளது. இதையடுத்து மதன்குமாரின் தாய், மீண்டும் கணவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். 

இருப்பினும், கார்த்திக் அடிக்கடி மதன்குமார் வீட்டிற்கு வந்து சென்றதால் ஆத்திரமடைந்த மதன்குமார், தனது தாயுடன் கள்ளக்காதலை கைவிடும்படியும், இனிமேல் வீட்டுக்கு வரக்கூடாது என்று கார்த்திகை கண்டித்துள்ளார். மேலும் தாயையும் கண்டித்துள்ளார்.

இந்நிலையில் ஆத்திரமடைந்த கார்த்திக் மதன்குமாரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து பலத்த காயமடைந்த கார்த்திக் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கார்த்திகை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother illegal lover stabbed to Plus 2 boy in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->