யார் யாரை பிரிப்பது என்று பார்ப்போம் - அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த எம்.பி கனிமொழி.!
mp kanimozhi speech about annamalai
தி.மு.க. எம்.பி. கனிமொழி காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- "ஆளுநரே வேண்டாம் என்கிறோமே. ஆளுநர் ஆளுநராகவே செயல்படாமல் அரசியல்வாதியாக தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் சொல்லக்கூடிய கருத்துகளை கேட்கக்கூடிய பொறுமை ஆளும் பா.ஜ.க.வுக்கு இல்லை. எந்த எதிர்வாதமாக இருந்தாலும் யார் பேசினாலும் சரி. எதிர்க்கட்சிகள் சொல்லக்கூடிய கருத்துகளை கேட்பதற்கு அவர்கள் தயாராக இல்லை.
நாங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கோ, எழுப்பக்கூடிய பிரச்சனைகளுக்கான விவாதங்களை ஏற்றுக்கொள்வதற்கோ அவர்கள் தயாராக இல்லை. எதிர்க்கட்சிகள் முன்வைக்கக்கூடிய விவாதங்களுக்கு அவர்கள் செவிசாய்ப்பதில்லை என்பதே உண்மை.
ஜனநாயகத்தின் மீதும் பாராளுமன்றத்தின் மீதும் இருக்கக்கூடிய மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது. இதுபோன்று பேசியவர்கள் பலரை அறிவாலயம் பார்த்துள்ளது. தி.மு.க. பார்த்துள்ளது. யார், யாரை பிரிப்பது என்பதை பார்ப்போம் என்று தெரிவித்தார்.
English Summary
mp kanimozhi speech about annamalai