நிர்மலா சீதாராமனுக்கு குருக்கள் மீது தான் அக்கறை - கனிமொழி ஆவேசம்.! - Seithipunal
Seithipunal


திமுக சார்பில் மூன்று நாட்கள் பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி கலந்துகொண்டு பேசியதாவது:-

”மழை வெள்ளத்தை பார்வையிட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருநெல்வேலிக்கு வந்தடைந்தார். அவரோடு தமிழக நிதியமைச்சரும் சென்றிருந்தார். அப்போது, நிர்மலா சீதாராமன் அக்கறையோடு விசாரித்தது கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் சகதியாக இருப்பதை தான். அங்கு இருக்கும் குருக்கள்களுக்கு என்ன சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை விசாரித்தார். 

கோவில் உண்டியலில் காசு போட வேண்டாம் என்று நிர்மலா சீதாராமன் சொல்கிறார். ஏனென்றால், அது அரசுக்கு போகுமாம். அனைவரும் ஜி.எஸ்.டி.யால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கில் அபராதம் போடுகிறார்கள் என்று மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். 
தற்போது வரை மக்கள் ஜி.எஸ்.டி.யால் கண்ணீர் சிந்தி வரும் நிலையை பார்க்கிறோம். ஜி.எஸ்.டி.யால் சிறு, குறு தொழில் செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்கு மத்திய அரசின் பிரதிநிதியாக வந்த நிர்மலா சீதாராமனுக்கு கோவில் குருக்கள்களுக்கு என்ன சம்பளம் வழங்கப்படுகிறது என்பதில் தான் அக்கறை உள்ளது. மழை வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தரவில்லை. தமிழ்நாடு வழங்கிய வரி பணத்தை மத்திய அரசு வைத்துக்கொண்டு திருப்பி வழங்குவதில்லை” என்று ஆவேசமாக பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mp kanimozhi speech againt nirmala seetharaman


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->