மக்களை ஏமாற்றுவதற்காக இபிஎஸ் மாற்றி மாற்றி பேசுகிறார் - எம்.பி கனிமொழி.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையில் நேற்று, மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் தாலுகா நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நான் பொறுப்பில் இருக்கும்வரை `டங்ஸ்டன்' சுரங்கம் அமையாது என்று உறுதிப்பட தெரிவித்தார்.

இந்த நிலையில், திமுக எம்.பி.கனிமொழி டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக அதிமுகவை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்துள்ளதாவது:- "மணிப்பூர் பற்றிய விவாதத்தை நடத்த வேண்டும். இந்த கனிம வள மசோதாவே அதானிக்காக இந்நாட்டின் கனிம வளங்களை வாரிக்கொடுக்கும் முயற்சி. இதை எதிர்த்து 28.07.2023 அன்றே நாங்கள் போராடினோம். 

டங்ஸ்டன் உள்ளிட்ட "பகுதி-டி" கனிமங்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவந்த இந்த மசோதாவை மாநிலங்களவையில் அ.தி.மு.க. ஆதரிக்காமல் இருந்திருந்தால் இன்று டங்ஸ்டன் விவகாரமே வந்திருக்காது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவை எதிர்த்துப் போராடியது இந்த காணொளியில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போதும் ஆதாரமில்லாமல் பேசமாட்டார். தொடர்ந்து மக்களை ஏமாற்றுவதற்காக மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mp kanimozhi tweet about eps


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->