கொட்டிதீர்த்த கனமழை! முதுமலை புலிகள் காப்பகம் மூடல்! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகம் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீலகிரி கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுவதால் மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பலர் வேலைக்கு செல்ல முடியாமல் மாணவ மாணவியர்கள் பள்ளிக்கூடம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு தாலுகாக்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களை பார்வையிட்டு முதுநிலை புலிகள் காப்பகம் சென்று விட்டு திரும்புவது வழக்கம். முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சீசன் இல்லாத காலங்களில்  தினந்தோறும் 200க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

முதுமலை புலிகள் காப்பதில் தப்பக்காடு யானைகள் முகாம் உள்ளது. இங்குள்ள வளர்ப்பு யானைகளை பார்க்கவும் வனதிற்கு நடுவே சவாரி செய்யவும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஒரு வார காலமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அனேக இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.

இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகளின் நலன் கருதி இன்று முதல் வருகின்ற 22ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு முதுமலை புலிகள் காப்பாகம் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mudumalai Tiger Reserve will be closed for three days from today due to continuous rain


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->