பேனா சின்னத்துக்கு எதிராக பேசிய முகிலனை குண்டுகட்டாக தூக்கிய காவலர்கள்..!! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக வங்கக்கடலில் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் மக்கள் கருத்து கேட்டு கூட்டம் நடைபெற்றது.

இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், மீனவ கிராம மக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி, சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த சங்கர், சமூக ஆர்வலர் முகிலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பேசிய சமூக செயற்பாட்டாளர் முகிலன் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக அமைக்கப்படும் பேனா நினைவு சின்னத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். 

அவர் பல்வேறு விஷயங்களை பேசிக் கொண்டிருக்கும் பொழுது நேரம் முடிந்து விட்டதாக அரசு அதிகாரிகள் அறிவித்தனர். அதனையும் மீறி சமூக செயற்பாட்டாளர் முகிலன் பேசிக் கொண்டிருந்ததால் கருத்து கேட்பு கூட்டத்திலிருந்து வெளியேற்றும்படி அரசு அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் முகிலனை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்ற அரங்கத்தில் இருந்து வெளியேற்றினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mukhilan was escorted out from meeting by the police


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->