கல்வெட்டில் அமைச்சர் கே.என் நேரு பெயர் இல்லாததால் 2 அதிகாரிகள் இடமாற்றம்..!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மணப்பாறை நகராட்சி சார்பில் சில நாட்களுக்கு முன்பு குடிநீர் தொட்டி திறக்கப்பட்டது. அதற்காக வைக்கப்பட்ட கல்வெட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெயர் இடம் பெற்று இருந்த நிலையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேருவின் பெயர் பொறிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் நகராட்சி துறை அமைச்சர் கே.என் நேரு பெயர் விடுபட காரணமாக இருந்த மணப்பாறை நகராட்சி பொறியாளர் விஜய்கார்த்தி மற்றும் பொதுப்பணி மேற்பார்வையாளர் ராஜேஷ் ஆகியோர் அலட்சியமாக இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ராஜேஷ் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கும், விஜய்கார்த்தி நாகப்பட்டினம் நகராட்சிக்கும் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுமான பணி ஆய்வுக் கூட்டத்தில் திமுக எம்எல்ஏ செல்வராஜ் தனது பெயரை வாசிக்காத உதவி பொறியாளரை பணியில் இருந்து தூக்குவேன் என அதிகாரிகள் முன்னிலையில் மிரட்டப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்பொழுது கல்வெட்டில் அமைச்சர் கே என் நேருவின் பெயர் விடுபட்டதால் இரண்டு அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Municipality officers transfer for KN Nehru name missing in inscription


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->