முரசொலி பஞ்சமி நில வழக்கில் நாளை மறுதினம் தீர்ப்பு!  - Seithipunal
Seithipunal


முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக எழுந்த புகாரை எதிர்த்து, முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கில் நாளை மறுதினம் (10.01.2024) உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

பாஜக நிர்வாகி கொடுத்த புகாரின் அடிப்படையில், தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, முரசொலி அறக்கட்டளை வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கில் அரசியல் காரணங்களுக்காக தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் புகாரை நிலுவையில் வைத்துள்ளதாக முரசொலி அறக்கட்டளை தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

பட்டா, விற்பனை பத்திரம் ஆகியவை உரிமையாளரை முடிவு செய்யும் இறுதி ஆதாரம் இல்லை என்று தேசிய எஸ்சி ஆணையத்தின் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நாளை மறுதினம் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலை உண்டாக்கிய முரசொலி அலுவலக பஞ்சமி நில வழக்கின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murasoli Panchami land case judgement date


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->