பிஞ்சு குழந்தைன்னு கூட பாக்காம சுட்டுக்கொன்ற- மர்ம நபர்கள்
Mysterious individuals shot and killed a baby
மத்திய பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற சிறுவன் மண்டபத்திற்கு வெளியே துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் மெரினா மாவட்டம் ஜவ்ரா பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில், பெற்றோர்த் தமது 5 வயது சிறுவனுடன் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நேற்று இரவு 8மணி அளவில் பெற்றோர்கள் மணமக்களை அலங்காரம் செய்து கொண்டிருக்கிறனர். அச்சமயத்தில் அச்சிறுவன் மண்டபத்திற்கு வெளியே சென்று விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அச்சிறுவனைத் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடினர்.
இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுவனைப் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் அச்சிறுவனைப் பரிசோதித்து பார்த்ததில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்கு பதிவு செய்து அச்சிறுவனின் சுட்டுக்கொன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதனை அடுத்து போலீசார் அச்சிறுவனின் பெற்றோர்களிடம் தங்களுக்கு முன் விரோதிகள், எதிரிகள் என யாரேனும் இருக்கிறார்களா என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
English Summary
Mysterious individuals shot and killed a baby