வேலூரில் வனத்தில் இருந்து மர்ம பொருள் கீழே விழுந்ததால் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


வேலூரில் வனத்தில் இருந்து மர்ம பொருள் கீழே விழுந்ததால் பரபரப்பு.!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் கிராமம் மோர்தானா கால்வாய் அருகே நேற்று இரவு வானத்தில் இருந்து மர்ம பொருள் ஒன்று கீழே விழுந்துள்ளது. இந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் உடனே வந்து பார்த்துள்ளனர்.

அங்கு பாராசூட் போன்ற ஒரு பொருளும், அதன் அருகிலேயே சிக்னல் அடித்துக் கொண்டு சிறிய அளவிலான பெட்டி ஒன்றும் கிடந்துள்ளது. இதனால் அந்தக் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் சம்பவம் தொடர்பாக விசாரித்தனர். பின்னர் வானத்தில் இருந்து கீழே விழுந்த பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

அப்போது அங்கு சிக்னல்கள் வந்தபடி இருந்த சிறிய அளவிலான பாக்சில் மத்திய அரசின் தேசிய வானிலை ஆய்வு மையம், சென்னை மீனம்பாக்கம் என்று முகவரியும், போன் நம்பரும் இருந்தது. உடனே போலீசார் அதிலிருந்த நம்பரை தொடர்பு கொண்ட போது அது வானிலை ஆராய்ச்சி மையத்தின் வானிலை ஆய்வுகளுக்கு அனுப்பப்பட்டது என்பது தெரிய வந்தது. 

மேலும், அந்தப் பெட்டி பல்வேறு பகுதியில் உள்ள தட்பவெப்ப நிலை, வானிலை மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய உதவிகரமாக இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, போலீசார் கீழே விழுந்து கிடந்த பொருட்களை பத்திரமாக சேகரித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mysterious object fell down from sky in vellore kutiyatham


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->