சீமான் தலைமையில் திருமுருகன் திருநாள் கொண்டாட்டம் - நாம் தமிழர் கட்சி தலைமை.! - Seithipunal
Seithipunal


மதுரவாயலில் சீமான் தலைமையில் முருகன் திருநாள் கொண்டாட்டம் நடைபெற்றதாக அக்கட்சி தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

நாம் தமிழர் கட்சியின் தலைமை சார்பில் வெளியிட்டுள்ள செய்தியில், " தலைநிலம் குறிஞ்சி தந்த தலைவன், தமிழர் இறை, நமது இன மூதாதை! முருகன் பெரும்புகழைப் போற்றிக் கொண்டாடும் திருமுருகன் திருநாளையொட்டி (தைப்பூசம்) வழமைபோல் இந்த ஆண்டும் நாம் தமிழர் கட்சியின் தமிழர் மெய்யியல் மீட்புக்கான பாசறையான வீரத்தமிழர் முன்னணி சார்பாக தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் தமிழர்கள் பரவி வாழும் நிலங்களிலும் மிகுந்த எழுச்சியோடு கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி நாம் தமிழர் கட்சி - மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி மற்றும் வீரத்தமிழர் முன்னணி சார்பாக, இன்று 28-01-2021 வியாழக்கிழமையன்று காலை 9 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள திருமுருகன் குடிலில் சீமான் அவர்களின் தலைமையில் முருகவழிபாடு மற்றும் வேல்வழிபாடு நடத்தப்பட்டது. 

பொதுமக்கள் அனைவருக்கும் தேன் - தினை மாவு உருண்டை, இனிப்பு பொங்கல் வழங்கி திருமுருகத் திருநாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று முப்பாட்டன் முருகனின் பெரும்புகழைப் போற்றிக் கொண்டாடினர் " என்று கூறப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Naam Tamilar Katchi Announce Murugan Festival Celebration in Seeman house 28 Jan 2021


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->