சற்றுமுன்: கார் விபத்தில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்! உயிரை காப்பாற்றிய சீட்-பெல்ட்!
Nagai AIADMK ExMinister OSManiyan Car Accident
நாகை அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பயணம் செய்த கார் விபத்தில் சிக்கியுள்ளது.
வேதாரண்யத்தில் இருந்து நாகை நோக்கி முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனது காரில் இன்று காலை பயணம் மேற்கொண்டுள்ளார்.
சரியாக திருப்பூண்டி அருகே இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால், காரை திருப்பிய போது, அருகே இருந்த கோவில் சுற்றுசுவரில் மோதி கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
நல்வாய்ப்பாக ஓஎஸ்.மணியன் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் சிறு காயங்கள் கூட எதுவும் இன்றி உயிர் தப்பியுள்ளார்.
அதே சமயத்தில் குறுக்கே வந்து இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அன்பழகன் என்பவர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
English Summary
Nagai AIADMK ExMinister OSManiyan Car Accident