தமிழகமே அதிர்ச்சி! நாகையில் 50 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடுரன் கைது! - Seithipunal
Seithipunal


நாகையில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மனநல ஆலோசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் அரசு காப்பகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் கீழ், மனநல ஆலோசகர் சத்யபிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு காப்பகத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மனநல ஆலசகர் சத்திய பிரகாஷ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 

காப்பகத்தின் கண்காணிப்பாளர் சசிகலா கொடுத்த புகாரின் பேரில், மனநல ஆலோசகர் சத்யபிரகாஷ் போக்சோ சட்டத்தின் கீழ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு காப்பகத்தில் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் (Good Touch - Bad Touch) குறித்து வகுப்பு எடுத்த போதே குழந்தைகளுக்கு சத்திய பிரகாஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவந்துள்ளது. 

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையே வெளியான ஒரு பரபரப்பு தகவலின் படி குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாகவும், மனரீதியாகவும் சத்யபிரகாஷ் பாலியல் தொல்லை கொடுத்திருப்பது விசாரணைகள் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagai Child Abuse case Sathya Prakash Arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->