நாகையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்! பல கோடி ரூபாய் மதிப்பு மிக்கதா? யார் கடலில் வீசியது?! விசாரணை தீவிரம்! - Seithipunal
Seithipunal


நாகை மாவட்டம், கோடியக்கரை பகுதியில் கரை ஒதுங்கிய இரு மர்ம பொருள், மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் என்பது உறுதியாகி உள்ளது. 

ரூபாய் 3 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த போதை பொருளை வீசியது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீனவர்கள் கொடுத்த தகவலின் பெயரில், வேதாரண்யம் கடலோர காவல் போலீசார் கரை ஒதுங்கிய இரண்டு பேக்கிங் செய்யப்பட்ட பிளாஸ்டிக் டப்பாவை ஆய்வு மேற்கொண்டனர். 

உள்ளே வெள்ளை நிறத்தில் சீனி போல இருந்த அந்த பொருளை, உயர் அதிகாரிகளின் உத்தரவின் பெயரில், சென்னையில் உள்ள தடைய அறிவியியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த ஆய்வில் இது போதைப் பொருளான மெத்தபெட்டமைன் என்பது தெரியவந்தது. மேலும் இதன் எடை 2 கிலோ இருந்ததாகவும், இதன் மதிப்பு சுமார் மூன்று கோடி ரூபாய் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இதனை யார் கடலில் வீசியது? அல்லது போதைப் பொருள் கடத்தும் போது இந்த டப்பா மட்டும் கடலில் தவறி விழுந்ததா? அப்படி என்றால் கடத்தியது யார்? என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagai Kodiyakarai Sea side Drugs Found


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->