நாகையில் வீடு கட்டாமலேயே, 146 வீடு கட்டியதாக பல கோடி ரூபாய் மோசடி! - Seithipunal
Seithipunal


நாகையில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் 146 வீடுகளை கட்டாமல் கட்டியதாக பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து அவரின் செய்தி குறிப்பில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிரதமரின் அனைவர்க்கும் வீடு திட்டத்தில் கடந்த 2016-2020 வரை 146 வீடுகள் கட்டாமலேயே, பயனாளிகள் பெயரில் பல கோடி மோசடி நடந்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

தமிழக லஞ்ச ஒழிப்பு துறை இந்த ஒரு மாவட்டத்தில் நடவடிக்கை நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், இந்த ஊழல் குற்றசாட்டுகளை சி பி ஐ விசாரிக்க வேண்டும். 

மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவதில் பெரும் ஊழல் நடைபெறுவதை நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம். 

குழாய் மூலம் குடிநீர், நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம், விவசாயிகள் கௌரவ நிதி, அனைவருக்கும் சுகாதார காப்பீடு என அனைத்து திட்டங்களிலும் ஊழல் பெருமளவில் நடைபெற்று வருகிறது. 

இந்த ஊழல்களில் தொடர்புடைய அனைவரும் பதவி நீக்கம் செய்யப்படுவதோடு, கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட்டு தக்க தண்டனை பெற வேண்டும்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagai PM Home scheme scam BJP condemn


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->