பாலியல் வழக்கில் கைதான நாகர்கோயில் காசிக்கு ஆயுள் தண்டனை.!
Nagercoil Kashi arrested in sex case gets lifetime Jail
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி (வயது 27). இவர் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்வதாக கூறி அவர்களுடன் உல்லாசமாக இருந்து ஆபாச வீடியோ எடுத்துள்ளார். அதன் பின்னர் அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி அந்த பெண்களிடம் பணம் பறித்துள்ளார்.
இது குறித்த புகாரில் கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட காசி குண்டர் சட்டத்திலும் கைதானார். இதில் 120 பெண்களின் 400 வீடியோக்கள் மற்றும் 1900 ஆபாச புகைப்படங்கள் காசியன் லேப்டாப்பில் இருந்து கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து காசியின் மீது ஸ்போக்க வழக்க பாலியல் பலாத்கார வழக்கு என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் காசிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோயில் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள காசிக்கு ஆயுள் தண்டனையுடன், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
Nagercoil Kashi arrested in sex case gets lifetime Jail