தி.மு.க அரசு அனைவரையும் கண்காணிக்கிறது - நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி.!!
nainar nagendiran speech about dmk
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க கூட்டணி உறுதியாகியுள்ளது. இதற்கிடையே, தமிழக பா.ஜ.க. புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில், புதிதாக தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நயினார் நாகேந்திரன் இன்று கோவைக்கு வருகை தந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:-
கூட்டணி குறித்தும், எத்தனை சீட் என்பது குறித்தும் யாரும் கவலைப்பட வேண்டாம். இது தொடர்பாக பேஸ்புக், ட்விட்டரில் பதிவு போட வேண்டாம். இந்த கூட்டணி குறித்தும், சீட்டு குறித்தும் பேச வேண்டியது அகில இந்திய தலைமை தான். அவர்கள் முடிவு செய்வார்கள்.
தமிழக அரசு எனது செல்போனை ஒட்டு கேட்கிறது. யார் என்ன செய்கிறார்கள் என்பதை தி.மு.க, அரசு கண்காணிக்கிறது. பா.ஜ.க, தொண்டர்கள் எல்லோரும் செல்போனில் சற்று எச்சரிக்கையாக பேசுவது நல்லது' என்றுத் தெரிவித்தார்.
English Summary
nainar nagendiran speech about dmk