நாமக்கல்லில் ஆன்லைன் ரம்மியால் மொத்த குடும்பமும் தற்கொலை? அதிரவைக்கும் சம்பவம்!
Namakkal Family mystery Death
நாமக்கல் பதிநகரில் பிரேம்ராஜ் என்ற வங்கி ஊழியரின் மனைவி மற்றும் குழந்தைகள் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தலைமறைவான பிரேம்ராஜூம் தற்போது தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50 லட்சம் வரை இழந்ததால் பிரேம்ராஜ் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.
அதன்படி, பிரேம்ராஜ் வீட்டில் இல்லாததால் மனைவி மற்றும் குழந்தைகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.
இதற்கிடையே தலைமறைவான பிரேம்ராஜை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், கரூர் மாவட்டம் அமராவதி பாலம் அருகே ரயில் முன் பாய்ந்து பிரேம்ராஜ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மோகனப்பிரியா மற்றும் அவரது குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா என்பது தெரியவரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
English Summary
Namakkal Family mystery Death