கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அதிரடி...!!! தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு அபராதம்...!
Krishnagiri District Collector takes action Fines for shops without name boards Tamil
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் 'தினேஷ் குமார்' அவர்கள், மற்ற மாவட்ட ஆட்சியர்கள் பெயர் பலகை குறித்து வெளியிட்ட அறிக்கையை தற்போது அவரும் வெளியிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் 'தினேஷ் குமார்':
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,"கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் மே மாதம் 15ஆம் தேதிக்குள் 100 % தமிழில் அனைத்து கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகைகள் கண்டிப்பாக மாற்றி அமைக்க வேண்டும்.
இந்தப் பெயர் பலகை அமைப்பதை உறுதி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மேலும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அனைத்து நிறுவனங்களில் பெயர் பலகைகள் தமிழில் அமைப்பது தொடர்பான வழிமுறைகளை கடைப்பிடித்திட வேண்டும்.
அதுமட்டுமின்றி நிறுவனங்கள் தங்கள் பெயர் பலகைகளை மே 15 க்குள் தமிழில் வைத்திட வேண்டும். அதன் பிறகும் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்கள் தமிழ் பெயர் பலகை குறித்து இதே அறிவிப்பை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Krishnagiri District Collector takes action Fines for shops without name boards Tamil