#நாமக்கல்:: மூதாட்டியை தள்ளிவிட்ட காவலர்... மாவட்ட எஸ்.பி எடுத்த அதிரடி நடவடிக்கை..!! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அய்யம்மாள் என்ற மூதாட்டி. இவருக்கு மூன்று மகன்கள் இருந்த நிலையில் அவர்கள் அய்யம்மாளை சரிவர கவனித்துக் கொள்வதில்லை என கூறப்படுகிறது.

இதனால் அவர் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் தொடர்ச்சியாக புகார் அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர் அளிக்கும் புகார் மீது காவலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என குற்றம் சாட்டிய அய்யம்மாள் இரண்டு தினங்களுக்கு முன்பு காவல் நிலைய வாசலிலேயே அமர்ந்துள்ளார்.

இதனைக் கண்ட பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் யுவராஜ் என்ற காவலர் அய்யம்மாளிடம் இருந்து மனுவை வாங்க மறுத்ததோடு அவரை கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் அவரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் காவலர் யுவராஜ் செயலுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் புகார் அளிக்க வந்த மூதாட்டியை கீழே தள்ளிவிட்ட காவலர் யுவராஜ் என்பவரை பணியிடை நீக்கம் செய்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal SP suspended policeman who pushed old woman


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->