65 சைபர் குற்ற வழக்கு: நாமக்கல் டீ கடை ஊழியர் கைது! பின்னணியில் சதி கும்பல்! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் சுமார் 65 சைபர் குற்ற வழக்குகளில் தொடர்பு இருந்ததாக, நாமக்கல் பகுதியை சேர்ந்த டீக்கடை தொழிலாளியை சிவகங்கை போலீசார் நேற்று கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் பெரிய நரிகோட்டை பகுதியை சேர்ந்தவர் ராபர்ட். 40 வயதாகும் இவர் பெங்களூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் போதே, instagram பக்கத்தில் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்ற ஒரு விளம்பரத்தை நம்பி முதலீடு செய்துள்ளார். 

அதன்படி 45 லட்சம் ரூபாயை பத்து தவணைகளாக முதலீடு செய்த ராபர்ட், ஒரு ரூபாய் கூட அதிலிருந்து வருமானத்தை பெறவில்லை. 

இதனால் சந்தேகம் அடைந்த ராபர்ட், சிவகங்கை மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நாமக்கல் மாவட்டம் நல்லிப்பாளையத்தை சேர்ந்த டீக்கடை தொழிலாளி தினேஷ் குமாரின் என்பவரின் வங்கி கணக்கிருக்கு அந்த 45 லட்சம் பணமும் சென்றுள்ளது தெரிய வந்தது. 

இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில், கடன் பிரச்சனையில் தவித்து வந்த தினேஷ்குமார், அவரின் நண்பன் மூலம் தனது வங்கி கணக்கை ஒரு சதவீத கமிஷனுக்கு கம்போடியா நாட்டை சேர்ந்த மோசடி கும்பலுக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

மேலும் அவருடைய வங்கி கணக்கின் மூலமாக  அந்த கம்போடியா கும்பல், 65 பேரிடம் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மொத்தமாக அவருடைய வங்கி கணக்கில் 3 கோடி ரூபாய் நாடு முழுவதும் உள்ள 65 பேர் பணத்தை செலுத்தியதும், இதற்காக அவர் மூன்று லட்சம் ரூபாய் கமிஷன் பெற்றதும் தெரியவந்தது.

மேலும் அவரது வங்கி கணக்கில் தற்போது இருந்த 19 லட்சம் ரூபாயையும் சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, மோசடி கும்பலை கைது செய்யும் நடவடிக்கைகளும் இறங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nammakkal Tea Shop Labour Arrest


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->