அருவருப்பின் உச்சக்கட்டம்! திமுககாரர் கூட இப்படி சொல்ல வாய்ப்பில்லை! திருமாவளவனுக்கு நாராயணன் திருப்பதி கண்டனம்! - Seithipunal
Seithipunal


நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த திருமவளவனிடம், "இத்துனை  நாட்கள் ஆகியும் வேங்கை வயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லையே" என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சற்று பதற்றத்துடன் பதிலளித்த திருமாவளவன், "நாட்கள் ஆகிவிட்டது என்பது ஒரு பிரச்சினையில்லை. ராமஜெயம் கொலை வழக்கில் வருடங்கள் பல ஆகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கு உள்நோக்கம் கற்பிக்க முடியுமா? 

நிர்வாக சிக்கல் இருக்கலாம். அரசு தலித்துகளுக்கு எதிராக இல்லை. வேங்கை வயல் பிரச்சினையில் யாரையும் காப்பாற்றும் முயற்சியில் அரசு ஈடுபடவில்லை. அரசு எதிராக, விரோதமாக இல்லை. உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க காலக்கெடு ஏதும் இல்லை. பொறுமையாக கண்டு பிடிக்கட்டும்" என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர், "திமுககாரர் போல பேசுறீங்க" என்று கேட்க, அதற்கு திருமாவளவன் ஆவேசத்துடன், "நான் என்ன தி மு க காரனா? அநாகரீகமாக பேசக்கூடாது" என்று ஒருமையில் கைநீட்டி மிரட்டலாக பதில் கொடுத்தார்.

இந்நிலையில், திருமாவளவன் பேட்டி குறித்து பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ராமஜெயம் கொலை வழக்கு என்பது தனி நபர் விவகாரம். ஆனால், வேங்கை வயலில் குடிதண்ணீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த விவகாரம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஒட்டு மொத்த கௌரவத்திற்கு நேர்ந்த அவலம், கொடூரம். அருவருப்பின் உச்சக்கட்டம். 

ஒரு கொலை வழக்கையும், இன அழிப்புக்கு ஒப்பான ஒட்டுமொத்த சமுதாயத்தை இழிவுபடுத்திய செயலையும் எப்படி ஒப்பீடு செய்ய முடியும்? குற்றவாளிகளை கண்டுபிடிக்க காலக்கெடு ஏதும் இல்லை என்றும் பொறுமையாக கண்டு பிடிக்கட்டும் என்று தி மு க வை சார்ந்த ஒருவரே கூட கூறியிருப்பாரா என்பது சந்தேகமே.

ஒரு சமுதாயத்திற்கு நேர்ந்துள்ள கொடுமைக்கு தீர்வு காண நிர்வாக சிக்கல் தான் காரணம் என்றும், அரசு யாரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடவில்லை என்று சொல்லி திமுகவை காப்பாற்ற  நினைப்பது அநாகரீகம் மட்டுமல்ல துரோகமும் கூட திருமாவளவன் அவர்களே" என்று நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narayanan Thirupathy condemn to Thirumavalavan For Vengaivayal issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->