திண்டுக்கல் || தக்காளி விலை குறைவால் விவசாயிகள் நஷ்டம்.!
neadr dindukal tomatto price decrease
ஒட்டன்சத்திரத்தில் பிரசித்தி பெற்ற காந்தி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இங்கிருந்து தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கு மற்றும் கேரள மாநிலத்துக்கு வியாபாரிகள் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இந்த மார்க்கெட்டில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டியின் விலை ரூ.350 முதல் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போது ஒரு கிலோ தக்காளி ரூ.25 முதல் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தற்போது தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதனால் விலை வீழ்ச்சி அடைந்து 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.70 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனையில் ஒரு கிலோ ரூ.9 முதல் ரூ. 10 வரை விற்பனை செய்யப்பட்டது.
இது தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்டபோது அவர்கள் தெரிவித்ததாவது, "தக்காளியின் வரத்து அதிகரிப்பால் போதிய விலை கிடைக்கவில்லை. மேலும் ஒரு பெட்டிக்கு சுமார் 4 கிலோ தக்காளி அழுகி வீணாகி விடுவதால் குப்பையில் கொட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த விலை வீழ்ச்சி இன்னும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் என்றது தெரிவித்தனர்.
English Summary
neadr dindukal tomatto price decrease