கடல் சீற்றத்தால் தண்ணீரில் மூழ்கிய விசை படகு - கடலில் தத்தளித்த மீனவர்கள்.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அடுத்து வானகிரி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தனக்கு சொந்தமான விசை படகில் நான்கு  மீனவகளுடன் இன்று காலை தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற இவர்கள் பூம்புகார் துறைமுகத்திற்கு கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். 

அப்போது திடீரென ஏற்பட்ட காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றத்தின் காரணமாக படகு தத்தளித்து. இதனால் நிலை தடுமாறிய விசை படகு எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கியது. இதில், படகில் இருந்த நான்கு மீனவர்களும் கடலில் குதித்து தத்தளித்தனர். 

இதைப்பார்த்த சக மீனவர்கள் அவர்கள் நான்கு பேரையும் மீட்டு பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அதன் பின்னர் மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் வானகிரி மீனவர்கள், மாற்று படகுகள் மூலம் கடலுக்கு சென்று தண்ணீரில் மூழ்கிய 20 லட்சம் மதிப்பிலான விசை படகை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near boombukar power boat submerged in sea for


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->