சென்னை || விளையாட்டால் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.!  - Seithipunal
Seithipunal


சென்னையில்லுள்ள மாதவரத்தில் வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்று, அலுமினிய பாத்திரத்தை தலையில் கவிழ்த்தும் பின்னர் எடுப்பதுமாக இருந்தது. ஒரு கட்டத்தில் அந்தக் குழந்தையின் தலை பாத்திரத்துக்குள் சிக்கிக்கொண்டது. 

அதன் பின்னர் அந்த குழந்தை கத்தி கூச்சலிட்டது. இந்த சத்தம் கேட்டு வந்த பெற்றோர் குழந்தையின் தலையில் சிக்கி இருந்த பாத்திரத்தை எடுப்பதற்கு முயன்றனர்.

ஆனால், அவர்களால் தலையில் இருந்து பாத்திரத்தை எடுக்க முடியவில்லை. அதன் பின்னர், அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

அந்த தகவலின் பேரில், வீட்டிற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் குழந்தையின் தலையில் சிக்கி இருந்த பாத்திரத்தை பொறுமையாக வெட்டி,  அகற்றினார்கள். அதன் பிறகு குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பியதனால், அனைவரும் நிம்மதியடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai children head stuk in vessel


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->