திடீரென மஞ்சள் நிறமாக மாறிய கொசஸ்தலை ஆறு - நடந்தது என்ன?
near chennai kosasthala river turned yellow colour
சென்னையில் உள்ள எண்ணூரில் கொசஸ்தலை ஆறும், கடலும் ஒன்று சேரும் முகத் துவார பகுதியில் ஏராளமான மீன்கள், நண்டுகள் மற்றும் எரால்கள் என்று அனைத்தும் கிடைக்கும். இந்த ஆற்றை நம்பி எண்ணூரை சுற்றியுள்ள எண்ணூர் குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம், காட்டுகுப்பம் உள்ளிட்ட எட்டு மீனவ கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று இந்த ஆற்றின் ஒருபகுதி திடீரென மஞ்சள் நிறமாக மாறியது. சிலமணி நேரத்தில் ஆறு முழுவதும் பரவி மஞ்சள் நிறமாக காட்சி அளித்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக படகுகளை கரைக்கு திருப்பி விட்டு வந்தனர்.
அதன் பின்னர் மீனவர்கள் சம்பவம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் படி, மீன்வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்று நீர் மஞ்சளாக மாறியதை படம்பிடித்தும், அந்த தண்ணீரை பாட்டில்களில் சேகரித்து பரிசோதனை கூடத்திற்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பார்த்தசாரதி தெரிவித்ததாவது , "எண்ணூரில் உள்ள கொசஸ்தலை ஆற்று பகுதியை சுற்றி ஏராளமான ரசாயன தொழிற்சாலைகள் உள்ளன. அந்த தொழிற்சாலைகளில் ஏதோ ஒன்றில் இருந்து தான் ரசாயன கலவை ஆற்றில் கலந்துள்ளது.
இந்த ரசாயன கழிவுகள் ஆற்றில் கலப்பதினால் மீன்கள் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதுடன் மீன்கள் செத்து போவதற்கு வாய்ப்புள்ளது. ஆகவே சுத்திகரிக்காமல் இதுபோன்ற கழிவுகளை ஆற்றில் விடும் தொழிற்சாலை மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
near chennai kosasthala river turned yellow colour