திருட சென்ற இடத்தில் குறட்டை விட்டுத் தூங்கிய திருடன் - கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்.! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே உள்ள அடையாறு கஸ்தூரிபாய் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் உரிமையாளர் குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். 

இதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்திய மர்மநபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து பணமா, நகை உள்ளிட்ட விலைமதிப்புள்ள பொருட்களைத் திருடியுள்ளார். அதன் பின்னர் அந்த நபர் மதுபோதையில் இருந்ததால் வீட்டில் உள்ள ஒரு அறையில் கட்டிலுக்கு கீழ் படுத்து தூங்கியுள்ளார்.

இதற்கிடையே வெளியில் சென்ற வீட்டின் உரிமையாளர்கள் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்ததில், வீட்டில் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. 

மேலும், வீட்டில் சோதனை செய்ததில் மர்ம நபர் ஒருவர் படுக்கையறையில் கட்டிலுக்கு அடியில் குடிபோதையில் தூங்கியுள்ளார். உடனடியாக, அவரை பிடிப்பதற்கு  முயற்சி செய்துள்ளனர். ஆனால், அந்த நபர் நொடி நேரத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். 

உடனே உரிமையாளர்கள் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிய நபரை கைது செய்தனர். 

அதன் பின்னர் போலீசார் அவரிடமிருந்து 49 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai man arrested for steal in house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->