ஆளுநர் மூலமாக இந்தி திணிப்பு.! போராட்டம் நடத்திய மதிமுக.! வைகோ பேச்சு.!
near chennai mtmk strike for hindi stuffing
நேற்று மதிமுக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்தி எதிர்ப்பை கண்டித்து மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என்று 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் ஆளுநர் மூலமாக இந்தியை திணிக்கும் நடவடிக்கையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்று முழக்கங்களை எழுப்பி மத்திய அரசுக்கு எதிராக, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ தெரிவித்ததாவது, ''தமிழக ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இருக்கிறது என்பதை மறந்துவிட்டு இவராக ஒரு கொள்கையை தெரிவிக்கிறார்.
ஆளுநரே பல்கலைக்கழக துணைவேந்தர்களையும் நியமிக்கிறார், இவரே பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் கூட்டத்தையும் போடுகிறார், இவரே புதிய சட்டங்களையும் அறிவிக்கிறார், அப்படி என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி எதற்கு'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.
English Summary
near chennai mtmk strike for hindi stuffing