கோவை || தூய்மை பணியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய மேயர்.! போராட்டத்தை வாபஸ் பெற்ற ஊழியர்கள்..! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில், 10,000க்கும் மேற்பட்டோர் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றிவருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், அரசு நிர்ணயித்துள்ள ஊதியம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 18 கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோவை மாவட்ட ஆட்சியர் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இ.எஸ்.ஐ. மருத்துவமனை தூய்மைப் பணியாளர்களுடனான பேச்சுவார்த்தையில்,

அவர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள ஊதியம், எட்டு மணி நேர வேலை, உள்ளிட்ட கோரிக்கைகளில் உடன்பாடு ஏற்பட்டதனைத் தொடர்ந்து, அவர்களது போராட்டம் வாபாஸ் பெறப்பட்டது. ஆனால், மற்ற தூய்மைப் பணியாளர்களுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அவர்கள் தங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இந்நிலையில், இன்று காலை கோவை மாவட்டத்தின் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில், மாநகர ஆணையர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

அந்த பேச்சு வார்த்தையில், "தூய்மைப் பணியாளர்களின் ஊதிய உயர்வு குறித்து வருகின்ற மாமன்ற நாட்களில் மாமன்றத்தில் உரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசின் பார்வைக்கு அனுப்பி வைத்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தற்போது போராட்டம் தொடர்பாக தூய்மைப்பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட காரணம் கேட்கும் குறிப்பாணைகள் விலக்க பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்" என்று தீர்மானம் செய்யப்பட்டது. அதன் பின்னர் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near coimbatore cleaning staff strike withdraw


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->