கோவை : ஆண் நண்பருடன் சுற்றுலா வந்த இளம்பெண் திடீர் மயக்கம் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
near coimbatore young girl dizzy in vaithegi water fall for take drunks
கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளிமலைப்பட்டினம் பகுதியில் உள்ள வைதேகி நீர்வீழ்ச்சியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றனர்.
அதன் பின்னர், அந்த பகுதியில் யானை நடமாட்டம் அதிகரித்ததால் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலையை வனத்துறையினர் அடைத்து வைத்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு செல்லாமல் அங்குள்ள ஓடையில் குளித்துவிட்டு செல்கின்றனர்.
அதிலும் குறிப்பாக, இந்த ஓடையில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில், நேற்று வார விடுமுறை என்பதால் ஒடையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அதில், கோவை மாநகரை சேர்ந்த இருபது வயது இளம்பெண் ஒருவர், தனது ஆண் நண்பருடன் அங்கு வந்திருந்தார்.
அங்கு இருவரும் பேசி கொண்டிருந்தபோது இளம்பெண் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள், ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் அந்த இளம்பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் இளம்பெண்ணை பரிசோதனை செய்தனர்.
அப்போது, அந்த இளம்பெண் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், அந்த வாலிபர் ஊட்டியை சேர்ந்தவர் என்பதும் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. இளம்பெண் அவரருடைய தோழி என்பதும் தெரியவந்தது.
மேலும் வார விடுமுறை என்பதால் இருவரும் இங்கு வந்து மது அருந்தியதாகவும், அதில் இளம்பெண்ணுக்கு போதை தலைக்கேறியதால் மயங்கி விழுந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் மாணவிக்கு முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
English Summary
near coimbatore young girl dizzy in vaithegi water fall for take drunks