கோவை : கள்ளக்காதலனுடன் சேர்ந்து லாட்ஜில் விஷம் குடித்த பெண் உயிரிழப்பு.!
near covai woman sucide with boy friend in lodge
நாகை மாவட்டத்தில் உள்ள வடபதி பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் கிருத்திகா தம்பதியினர். இவர்களுக்கு குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதனால், கிருத்திகா தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தார்.
இதற்கிடையே கிருத்திகாவிற்கு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் பழகி வந்தனர். இந்த விவகாரம் சில நாட்களுக்கு முன்பு கிருத்திகாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது.
இதனால், ஆத்திரம் அடைந்த அவர்கள் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிருத்திகாவைக் கண்டித்துள்ளனர். இது தொடர்பாக அவர் தனது கள்ளக்காதலன் கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் இருவரும் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி கோயம்புத்தூருக்கு வந்து, பின்னர் இருவரும் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.
அங்கு இருவரும் சந்தோசமாக இருந்து விட்டு பிறகு குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்து சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். இவர்கள் இருவரும் லாட்ஜில் வாடகை கொடுக்காமல் இருந்ததனால் லாட்ஜின் பொறுப்பாளர் வாடகை கேட்பதற்காக சென்றுள்ளார். அப்போது அறையில் தங்கி இருந்த இருவரும் மயக்க நிலையில் இருந்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த லாட்ஜ் பொறுப்பாளர் இறைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், கிருத்திகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கிருஷ்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
English Summary
near covai woman sucide with boy friend in lodge