தேர்வெழுதிய இடத்தில் கைவரிசையைக் காட்டிய இளைஞர் கைது.! - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பி.எட்.தேர்வு நடைபெற்றது. ஆனால், இந்த தேர்வை எழுத வந்தவர்களின் செல்போன்கள் உள்ளே கொண்டு தேர்வறையின் உள்ளே எடுத்து செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு தேர்வு மையத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்தது. 

அதன் பின்னர், தேர்வர்கள் தேர்வு எழுதி முடித்துவிட்டு வெளியே வந்து பார்த்தபோது, தேர்வு அறைக்கு வெளியே இருந்த அந்த செல்போனில் ஒன்று காணாமல் போய் உள்ளது. 

அந்த மொபைலை திருடியதாக எழுந்த புகாரின் பேரில், செட்டிக்கரை அருகேயுள்ள குரும்பபட்டி பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

அந்த விசாரணையின் போது, "தான் ஒரே ஒரு செல்போனை மட்டும் தான் திருடினேன்" என்று அவர் தெரிவித்ததனால், போலீசார் திருடப்பட்ட செல்போனை வாங்கிவிட்டு விடுவித்தனர்

இந்நிலையில், கல்லூரியில், தேர்வு நடந்த அன்று பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது லோகேஸ்வரன் பலரது செல்போன்களை திருடி சென்ற காட்சி பதிவாகி உள்ளது. இதனால் மீண்டும் லோகேஸ்வரனை கைது செய்த போலீசார் அவரை கிளை சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near dharmapuri young man arrested for mobile kidnape in exam hall


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->