கோவை கார் வெடிப்பு : திண்டிவனத்தில் சோதனை நடத்திய போலீசார். - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூரில் கார் ஒன்றில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து போலீசார் தமிழகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் படி, தமிழகம் முழுவதும் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான் மகன் இஸ்மாயில். இவர் கோவையில் இந்து அமைப்பு தலைவர்களைக் கொலை செய்வதற்கு திட்டம் தீட்டிய வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக தெரிவித்து கடந்த 2012 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர், இஸ்மாயில் வீட்டில் தேசியப் புலனாய்வு போலீசார் சோதனையில் ஈடுபட்டு விசாரணை மேற்கொண்டு கோவை சிறையில் அடைத்தனர். இதையடுத்து, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி திண்டிவனம் காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் கோவையில் கார் ஒன்றில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தையடுத்து, திண்டிவனம் இஸ்மாயில் வீட்டில் நேற்று முன்தினம் ஏஎஸ்பி அபிஷேக் தலைமையிலான போலீசார் திடீரென சோதனையில் நடத்தினர். 

இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கும்போது, “கோவை குண்டு வெடிப்பு சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட பழைய குற்றவாளியான இஸ்மாயில் வீட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தோம். 

இந்த சோதனைக்கு அவரது குடும்பத்தினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினார்கள். அந்த வீட்டில் சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் இல்லை.” என்றுத் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near dindivanam police raide for covai car accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->