திண்டுக்கல் : கிணற்றில் விழுந்து குழந்தை இறந்த சம்பவம் - கள்ளக்காதலனுடன் தாய் கைது.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எரியோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவர் மனைவி துர்காதேவி. இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், கணவன் மனைவிக்கு இடையே சில நாட்களாகவே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. 

இதன் காரணமாக கணவரை பிரிந்த துர்காதேவி நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டியில் தனது உறவினர் பாலுவின் தோட்டத்து வீட்டில் குழந்தையுடன் தங்கி வந்தார்.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தோட்டத்து வீட்டிலுள்ள கிணற்றில் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து வி.ஏ.ஓ. அளித்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

அந்த விசாரணையில், துர்காதேவிக்கும் தோப்புபட்டியை சேர்ந்த அஜய் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. குழந்தை இறந்த அன்று அஜய் மற்றும் துர்காதேவி உல்லாசமாக இருப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை நிலை தடுமாறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, அஜாக்கிரதையாக இருந்த தாய் துர்காதேவி மற்றும் அவரது கள்ளக்காதலன் அஜய் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near dindukal children died in well mother and boyfriend arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->