திண்டுக்கல் : பள்ளிக்குத் தாமதமாக வந்த மாணவரை வெயிலில் முட்டி போட வைத்த ஆசிரியர் - வைரலாகும் புகைப்படம்.!
near dindukal teacher made to student kneel in sun photo viral
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே செந்துறையில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றுள்ளது. சுமார் 1600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இந்தப் நேற்று பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடைபெற்றது.
இதனால் மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவரும் மதியம் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தி அவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் எடுத்து சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், பொதுத்தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் செந்துறை அரசு தொடக்கப்பள்ளிக்கு வருமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
அந்த மாணவர்களில் ஒருவர் மட்டும் வகுப்பிற்கு சரிவர வராமலும், பள்ளிக்கு காலதாமதமாகவும் வந்துள்ளார். இதனால் ஆசிரியர் ஒருவர் அந்த மாணவரை அழைத்து திட்டியுள்ளார்
அதன் பின்னர் அந்த மாணவரை உச்சி வெயிலில் பள்ளி மைதானத்தில் முட்டி போட்டுக் கொண்டே படிக்க வைத்துள்ளார். இதனால் அந்த மாணவன் சூடுதாங்க முடியாமல் கண்ணீர்விட்டு அலறித் துடித்துள்ளார்.
இதை அங்குள்ள சிலர் படம் பிடித்து வாட்ஸ்அப் குரூப்களுக்கு அனுப்பியுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
near dindukal teacher made to student kneel in sun photo viral