பேச மறுத்த கள்ளகாதலியின் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு கொன்ற காதலன் கைது.!
near dindukkal man arrested for kill girl friend
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாலப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராணி. கணவரை இழந்த இவர் தனது மகன்களுடன் இருந்து வந்துள்ளார். அதில் மூத்தமகனுக்கு திருமணமாகி அவர் தன் குடும்பத்துடன் கோவையில் தனியாக வசித்து வந்துள்ளார். இளைய மகன் திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் செல்வராணிக்கும் குமரன் திருநகரைச் சேர்ந்த பிரபு என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதையடுத்து இருவரும் ஒன்றாகவே வேலைக்கு சென்று வந்துள்ளனர்.
இந்த விபரம் செல்வராணியின் மகன்களுக்கு தெரிய வர அவர்கள் தனது தாயை கண்டித்துள்ளனர். இதன் காரணமாக செல்வராணி பிரபுவின் தொடர்பை துண்டிக்க நினைத்து அவருடன் பேசுவதை குறைத்து வந்துள்ளார்.
இதையடுத்து, கடந்த இரண்டாம் தேதி இருவரும் ஒரே இடத்திற்கு வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது பிரபு தனது காதலியான செல்வராணிக்கு உணவு வாங்கி வந்துள்ளார். ஆனால், அதனை செல்வராணி சாப்பிடுவதற்கும், அவருடன் பேசுவதற்கும் மறுத்துள்ளார்.
இதனால், மன வேதனையடைந்த பிரபு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். இதனால், பிரபு செல்வராணியுடன் நீ என்னுடன் பேசாவிட்டால் நான் இறந்து விடுவேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
அதற்கு செல்வராணி எதுவும் பேசாமல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரபு அருகில் இருந்த குளவிக் கல்லை அவரது தலையில் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே செல்வராணி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து பிரபு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் பிரபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
near dindukkal man arrested for kill girl friend