கிருஷ்ணகிரி || தலையில்லாமல் தண்ணீரில் மிதந்த உடல்.! தலையை தேடுவதில் தீவிரம் காட்டும் போலீசார்.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தாலுகா பாகலூர் அருகே சென்னசந்திரம் ஏரி உள்ளது. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக இந்த ஏரியில் முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. 

இந்நிலையில், நேற்று மாலை இந்த ஏரியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மிதந்தது. அந்த உடலை பார்த்து பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து பாகலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஏரியில் மிதந்த உடலை மீட்டனர். அப்போது அந்த உடலில் இருந்து தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டதும், கை மற்றும் கால்களில் ஆங்காங்கே வெட்டு காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. 

அதன்பின்னர் போலீசார் அந்த உடலை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்ததில்  கொலை நடந்ததற்கான எந்த தடயமும் கிடைக்காததனால் வேறு எங்கோ கொலை செய்து உடலை இந்த ஏரியில் வீசியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். 

மேலும், இறந்தவரின் தலை கிடைத்தால்தான் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, எதற்காக கொலை செய்யப்பட்டார்? உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்திவரும் போலீசார் தற்போது தலையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near krishnagiri man body float in lake


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->