மதுராந்தகம் : லாரி மீது டாட்டா ஏசி மோதியதில் 6 பேர் உயிரிழப்பு.!! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் பகுதியில் இருந்து, 15க்கும் மேற்பட்டோரை ஏற்றிக்கொண்டு டாட்டா ஏசி வாகனம் ஒன்று சென்னையை நோக்கி புறப்பட்டது.

அப்போது இந்த வாகனம் முன்னே சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து டாட்டா ஏசி வாகனத்திற்கு  பின்னால், வந்து கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று, டாட்டா ஏசி வாகனத்தின் மீது மோதி உள்ளது.

இதில் இரண்டு வாகனங்களுக்கு இடையே டாட்டா ஏசி சிக்கி நசுங்கியதில், ஓட்டுனர் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்துக்குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில்,  கார்த்திகை தீபத்திற்காக கோயிலுக்கு சென்று திரும்பிய பொழுது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 இந்த விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அனைவரும் சென்னை பல்லாவரத்திலுள்ள பொழிச்சலூர் ஞானாம்பிகை தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும், இந்த விபத்துக் குறித்து தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maduranthagam tata ac accident six peoples died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->